செவ்வாய், 20 டிசம்பர், 2011

கடைசி மனிதன்


பூமியின் விநோதங்கள்;விண்ணின் விளையாட்டுகள் முன்
வாயடைத்துப் போகிற(து) மனிதம்
தொடர்கிறது முடிவின்றி

மேற்கு வங்கம் வரவேற்கிறது:


மருத்துவமனை எங்கும் நிறைய
கள்ள(ர்) சாராய தீ நாக்குகள் எரிய
கம்யூனிஸ்ட் புத்ததேவ் ஆண்டாலும் மம்தா...

மெல்லினம் சொல்லிடும் :


ஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும்
இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக
எங்கேயும் எப்போதும்!

வியாழன், 1 டிசம்பர், 2011

ஹைக்கூ குயில்


காக்கைக் கூட்டில் ஹைக்கூ....குயில்
காணும் முன் முட்டையிட்டது  வெளிவர
எல்லாமே கறுப்பு; குரல் தவிர!

திங்கள், 21 நவம்பர், 2011

நன்றி (சொல்வது)


  நன்றி (சொல்வது)

  போதும் நிறுத்து என்பதற்கா?
  உள்ளார்ந்த பறை சாற்றலின் வெளிப்பாடா?
  கூட்டவும் கழிக்கவும்.

திங்கள், 14 நவம்பர், 2011

பைதான்


ஆட்சி மாற்றம் (என்பது) பொய்தான்
கட்சி நாற்றம் (என்பது) மெய்தான்
ஜனநாயகப் பைதான்!.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

உதிர்ந்த பூ


18 வயது நிரம்புவதற்குள்
இதழ்கள் துடிக்கிறது இணைய(ம்) கேட்கிறது
உதிர்ந்த பூ கிளைக்குத்  திரும்பாது!


செவ்வாய், 11 அக்டோபர், 2011

21 ஆம் நூற்றாண்டிலும்


பாக்டீரியா, வைரஸ்களுடன்
மனிதம் தொடர்கிறது
சிட்டிஜன்ஸ்; நெட்டிஜன்ஸ்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

பூ நாகம்


பாதம் தொட்டு இரு கரம் கூப்பி வணங்குகிறார்
கால்களால் செல்பவரை கார்களால் கடக்க வேண்டி;

பஞ்சாயத்து தேர்தல்!

செவ்வாய், 4 அக்டோபர், 2011

எங்கெங்கோ?


நாயுருவிகூட நன்றாய்த்தான் பூக்கிறது
தாழையில் நாகம் மோகம் கொண்டிருக்கிறது
என்றாலும் சேருமிடம்...!

திங்கள், 3 அக்டோபர், 2011

அலைக்கழிப்பூ


விடை பெற முடியா ஒரு உறவு நடுக் கடல்
வாழ் மேற்பரப்பில் தலைநீட்டி
மூழ்கியும் மிதந்தும் அலைக்கழிப்பாய்!

திங்கள், 26 செப்டம்பர், 2011

விண்ணும் மண்ணும்


துணையாகிட வேண்டிய குடையே
கனமாகிடக் கூடாது.
போல மனைவியும் கண்ணும்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அசாரின் ஆடுகளம்.


அசார் அடித்த பந்து
பூமிக் கோட்டிற்கு வெளியே

200கி.மீ வேகத்தில் அயாசுதீனாக!

திங்கள், 12 செப்டம்பர், 2011

தியானம்:

சோம்பேறித் தனத்தைக் கற்றுக் கொடுப்பதற்கல்ல
தேவையில்லாத அலைச்சலை வெட்டி விடுவதற்கே.



சிவப்புக் குரோட்டன்ஸ்; நீல லிட்மஸ்.

தொட்டிற் பழக்கம்


மருந்து வாங்கப் போயிருக்கிறது துணை
விருந்து கேட்க நினைக்கிறது இணை
முயலும் ஆமையும்!

வியாழன், 1 செப்டம்பர், 2011

இருளும் ஒளியும் மறையும் மாயை


உதயம் என்பார்; இதயம் என்பார்;
சேர்க்கை என்பார்; பிரிவு என்பார்;
ஒன்றுமில்லாமலே!

புன் முறுவல்


எங்கேயும் எதிர்பார்த்தபடி;
என்னவானாலும் ஒரு முகச் சுளிப்புடன்
காலம் மேவ!

முரண்:


எனது பாதையும் பயணமும்
வெகு தூரம்; எனினும்
நீயும்!

ஒன்று சேர:


குறு நிலவும் குரானும்
ஒடித்த தந்தமும் மகாபாரதமும்
பைபிள் பாலத்துடன்.

புதன், 31 ஆகஸ்ட், 2011

கன்பியூசியஸ்


பொய்க்கு கால்கள் இல்லை
சிறகுகள் உண்டு-கன்பியூசியஸ்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

படி! கல்!


படிப் படியாய் முன்னேற
வாழ்க்கையில் வாழ்க்கையை
படி!

பூ இடத்தான் முடிகிறது.


உன்னைத் தாங்கிய அந்தக் காகிதங்களுக்குத் தான்
என்னால் தீ இட முடிந்தது
உன் நினைவுகளுக்கு?

திரும்பி வரும்


யானை தலையில் மண்
என் தலைவி(யின்) கண்
பூமராங்!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பூ வை!


பூ விற்றுக் கொண்டிருக்கிறாள்
பூ வைக்காமலே
பூவை!

புதன், 17 ஆகஸ்ட், 2011

தமிழ் (குடி) அரசு


பால் இல்லையா மகனே?
நீர் இல்லையா மகளே?
பீர் இருக்க பயமேன்!

தாய்ப் பால்



மதுவுக்கும் குடிக்கும் பஞ்சம் இல்லை
குடி நீருக்கு பஞ்சம்
2020ல் வல்லரசு!

பாரை ஆளு(ம்) ஆளைப் பார்.



நாட்டின் பெரிய முதியோர் இல்லம்:
இந்தியப் பாராளுமன்றம்.
அட கிருஷ்ணா!

குறி

உன் தலைக்கு குறி வைக்கிறவர்களின்
காலுக்கு குறி வைப்பதில்
தவறிருக்க முடியாது

சுதந்திரம்

எங்கும் ஒரு நாள் சுதந்திரப் பேச்சு
கட்சி; ஆட்சி; காட்சி
உஷ்! மூச்.