திங்கள், 25 செப்டம்பர், 2023

எண்ணத் தனிமச் சேர்க்கைகள்: கவிஞர் தணிகை

 எண்ணத் தனிமச் சேர்க்கைகள்: கவிஞர் தணிகை



1. கறை படிந்த நிலமல்ல இது

   தியாகக் குருதி நிறைந்தது


2. நிரந்தரமானது:

   தீர்க்க முடியாத பிரச்சினை என்று(ம்)

   மாற்றமின்றி என்றும் இருந்து மாறாதது


   கொசுக்கள்


3. ஏழ்மையில் புகழ்தல் இல்லை புகல்தலே


4. புராணங்களை நம்பவில்லை, அறிவியலை நம்புகிறேன்


5. சமூக விஞ்ஞானி:

   பெரியாருக்கு  இவ்வளவு அறிவு அந்த ஒரு(வரின்) மூளையில்

   எப்படி  வளர்ந்தது,இருந்தது என்று எண்ணி வியக்கிறேன்


6. பசியோடிருக்கும் ஒவ்வொரு உயிரின் பசியையும் ஆற்ற முயலாத‌

   உயிர்கள் செய்வது(ம்) பாவமே


7. இராமலிங்கரின் ஜீவ காருண்ய பசி தீர்த்தலையும்

   காந்தியின் இராம ராச்சியத்தையும்

   மார்க்ஸ் லெனின் தத்துவத்தையும் என்னால் ஒன்றிப் பார்க்க முடிகிறது


8. தமிழ் நாட்டில் பா.ஜ.க காலூன்ற முடியாததற்கும்

   வேரூன்ற‌ வழியில்லாமல் போனதற்கும் காரணம் பற்றி ஆய்வு செய்தால்

    அது பெரியார் பெற்ற வெற்றிதான் என்ற முடிவு வருகிறது.


9. பிரபஞ்சம்,உயிர்கள் நலம் இவற்றிற்கான பாலம் அறிஞர் மொழிகள்


10. நல்ல தலைமை+ தவறான இயக்கம்

    தவறான தலைமை + நல்ல இயக்கம்

    இரண்டுமே கேடுதான்.




செவ்வாய், 19 செப்டம்பர், 2023

பூவை உரை Scratch with Flowers/speech of lady

 பூவை உரை



என்னை ஒரு இறகசைவாக மிதக்கவிடுகிறது காற்று

எல்லாப் பக்கங்களிலும் அசையவிடாது காலப் பூட்டு



ஆணியறை!.



Scratch with Flowers



Air makes me as a feather and floating

Time lock is arrest all of my moments



Fix with Nails.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

காலங்கள் மாறுகின்றன‌ CHANGES TIME CHANGES

 எங்கள் வீட்டு முதல்  உணவிற்காக‌

                            காகங்களுக்குப் பதில் அணில்கள்


பூனைகள் அடுத்த வீடுகளுக்கு ஆளாக‌




எலிகள் நாட்டாமை.


INSTEAD OF CROWS NOW SQUIRRELS

        COMING TO EAT FIRST FOOD

OUR CATS SERVING TO OTHER HOMES


RATS RULING

அசைவும் நகர்வும் MOBILITY

 புவியை விட்டு விரைவாக CELL ல‌ நினைக்கிறார்கள்

அதிவேக வாகன ஓட்டிகள்



விதிப் பயன்.


THINK THIS PREYS TO GO FROM EARTH AS SOON

RASH DRIVERS


FATE