புதன், 31 டிசம்பர், 2014

பெண் பா(வை)தோல் அழகு! Is it beauty of woman means outer skin and shape of body?

Wants and lust are like ocean
But our body and health is like as palm
Cat's closing eye.



கடல் அளவு ஆசை, காமம்
கை அளவு உடல், நலம்
பூனை மூடிக் கொண்ட கண்

திங்கள், 22 டிசம்பர், 2014

அரு மருந்து.Great Medicine

Your prayer is with boundary
But boundary less space is real feast

whatever boons have!





எல்லைக்குள் கடவுளை நீ வணங்கு
எல்லையற்ற விசும்பே பெருமருந்து

வரம் இருந்து(ம்)!


ஞாயிறு, 14 டிசம்பர், 2014

நாய் வால் Dog's Tail

Hunger and lust will not ends up
Power cut never ends up with Tamil Nadu

Conservative watery mind.



எப்போது(ம்) பசி(யும்) காமம்-உம்
எப்போது(ம்) மின்வெட்டு(ம்) தமிழகம்

கர்நாடகம் நீ(ர்) மனது!

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

எதிர் துருவங்கள் OPPOSITE POLES


Money power and noble service is
attracts and against each other
still how many steps?1:8=18.?


பொருள் பலமும் சேவை குணமும்
ஒன்றை ஒன்று ஈர்த்தபடி எதிர்த்தபடி
எத்தனை படி?1:8.=18?


வியாழன், 27 நவம்பர், 2014

HURRICANE AND TYPHOON: ஊழிப் பாட்டு

Strong hurricane dashing the ship in the mid of  ocean
sufficient Wind helping the ship to travel
Life of Wind.



கப்பலை அலைக்கழிக்கிறது
கப்பலை அலை மேல் செலுத்துகிறது
உயிர்க் காற்று!

திங்கள், 24 நவம்பர், 2014

images only not useful more than that:மாயா மோகினி

Stars visible only in nights
Lightning visible always to eyes
meagre attraction of sights.



கண்ணுக்குத் தெரியாத ஒளிப்புள்ளிகள்
கண்ணுக்குத் தெரிகின்ற ஒளி மின்னல்கள்
பா(ர்)வைக் கவர்ச்சி!.

வியாழன், 13 நவம்பர், 2014

யாவும் தந்ததிந்த தீயும் காற்றும்: Everything created by Air & Fire dust.

மறைபொருள் காட்டி நிற்பாய்
மனதில் சுடர் ஏற்றி நிற்பாய்
செஞ்சுடர் பரிதி!


Some words are giving meaning with out saying
some moments are lighting our minds with out moving
CORE OF LIFE.

வியாழன், 6 நவம்பர், 2014

STRUGGLE:போராடுகிறது

Moral power in favour of good force
Stained Knife for Evil
Louder,Knife!


நியாயத்துக்காக அறச்சக்தி
அநியாயத்துக்காக துருப் பிடித்த கத்தி
கத்தி கத்தி!

புதன், 15 அக்டோபர், 2014

எல்லாவற்றுக்கும் பொருந்தும். Applicable to ALL: IN AND OUT

IN AND OUT
inlet and outlet takes minimum time
 But do it with suitable time
it applicable to all.


உள் வாங்கவும்,வெளியேறவும்
குறைந்த நேரமே! அதை உரிய


 நேரத்தில் செய், உபாதை குறை!.

வியாழன், 9 அக்டோபர், 2014

ஜெ மீன் ஜமீன் ஜாமீன் : Golden fish,Jamindhar fish Bail fish:finish.

caught all type of fishes
But bail will not be given
missing fish escaping!?


எல்லா மீனும் கிடைச்சுது
ஜாமீன் மட்டும் கிடைக்கலையே!
கழுவின நழுவின மீன்



வியாழன், 25 செப்டம்பர், 2014

Learning is Education not knowing Literacy.கற்பதே கல்வி படிப்பதல்ல


Telling to Read;Reading to tell,
Reading to keep;Though Reading we didn't care
Read and learn by step by step to change.


படிக்கச் சொல்கிறோம்; படித்துக் கொள்கிறோம்
படித்துச் சொல்கிறோம், படித்து(க்/ம்) கொல்கிறோம்
படி, படி, படிப்படியாக!

வியாழன், 11 செப்டம்பர், 2014

Life starts with merger of both happy and sorrow:இன்பக் கேணி துன்பத் தோணி


ஆவுடையப்பன் லிங்கம் பேணி
ஆவுடையம்மாள் யோனி
அசிங்கம் போ நீ!




Life have two sides like coin
happy and sorrow plays vital role
if u think it is ugly leave it.

புதன், 27 ஆகஸ்ட், 2014

GOD/ALMIGHTY:கடவுள்

EVERY THING WILL BE OCCURS
GOD WILL GIVES US,
HAPPY/SORROW



எல்லாம் இருக்கும் இருக்கும்
அல்லா கொடுக்கும் கொடுக்கும்
துன்பம் இன்பம்

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

FIND YOURSELF,FIND THE TRUTH:உன்னையே நீ அறிவாய்!

Parents tells good to children
Is this is Government telling and doing bad?
Find yourself!


செய் தக்கதை சொல்வார் பெற்றவர்
செயத் தகாததை சொல்வது அரசா?



உண்மையை நீ அறியாய்,அறிவாய்!

திங்கள், 21 ஜூலை, 2014

naming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்

Its an path of world birth,and birth of world language
Its an Life's base,But named
As to curse,birth entrance of human.





உலக வழி, தாயின் மொழி
வாழ்வின் ஆதார(ம்)
பேர் சொல்லி! குறி!.

திங்கள், 14 ஜூலை, 2014

war and struggle போராட்டம்

To Power towers establish,coconut and palm trees fell down
Human deserts nature to eat,Nature deserts creatures to eat
War, Struggle   Play.




மின் கோபுரங்கள் எழ தென்னை பனை விழ
இயறகையை மனிதர் தகர்த்து சாப்பிட, உயிர்களை இயற்கை...
போர் ஆட்டம்!

சனி, 28 ஜூன், 2014

தொலையாது பார்த்துக்கொள்

Human needs locks
Human locks and Human songs don't need
Keys:and locks.

மனிதர்க்குப் பூட்டுகள் வேண்டும்
மனிதப் பூட்டுக்கு  மனிதர் பாட்டுக்கு


சாவியும் பூட்டும்?

திங்கள், 16 ஜூன், 2014

காம உருமாற்றம்.

செயல்களில் இருந்து பார்வைக்கும்
பார்வையிலிருந்து வார்த்தைக்கும்...
வெற்றிடத்தில்!

ஞாயிறு, 1 ஜூன், 2014

வறண்ட பிரதேசங்களில் கற்கள்

வார்த்தைகளும் சொற்களும் அடையாளம்
மொழியும் ஆளுகையும் தொடு உணர் ஊடகம்
பாவனை பா வனை

புதன், 14 மே, 2014

தையல் வேலை

துணியோடு சேர்த்து என்னையும்
தைக்கிறாள் துணிவோடு


மனை(வி) துணை(வி) திருடி!

தூங்கா மணி விளக்கு:கலங்கரை விளக்கம்.

நின்று எரியும் விளக்காக
அமர்ந்திருந்தேன்


அசையாத சுட ரோடு ஒளி(ர்)ந்தபடி

வியாழன், 8 மே, 2014

இரண்டு உச்சம் மீதம் எச்சம்

வங்கம் தந்த தங்கப் பு(தை)யல்
அக்கினி நட்சத்திர வேணில் தாக்கம் தகர்த்த
இயற்கைப் பயல்

புதன், 30 ஏப்ரல், 2014

ஓர்மை பன்மை

குறைகளே தெரிகிறது
நிறை செய்யவா? குறை தீர்க்கவா?


மேதமையின் ஆளுமை

புதன், 16 ஏப்ரல், 2014

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மணி யா(ர்) நீ?

மா தவம் செய்திடல் வேண்டும்
மாதவன் ,மாதவி ஆகிட
தியானி யார் நீ?

புதன், 26 மார்ச், 2014

பசியின் ருசி

பூனையும் நாயும் நக்கியே...
அல்குல் பை... மானிடனும்
பஞ்சாமிர்தம் தேன்!

ஞாயிறு, 2 மார்ச், 2014

எவ்வளவு நேரம்?

இமை அசைவை காரணமாக வைத்தா(ன்)ய்!
கண் மூடும் நேரம் உயிர்ப்பறவை காணாமல் போக
ஒருமிப்பு பிரமிப்பு!

திங்கள், 24 பிப்ரவரி, 2014

மழையின் ரீங்கார இசை

குடை தலை மீது இருந்தது
மழை குடை மீது இசைத்தது

இயைந்திருந்தோம் நேரம்!

புதன், 12 பிப்ரவரி, 2014

அது தான் வாழ்க்கை.

தூக்க முடியாவிட்டாலும் தூக்கிதான் ஆகவேண்டும்
தூங்க முடியாவிட்டாலும் தூங்கிதான் ஆகவேண்டும்


எதிர்பாரா(த) சேர்(க்)கை