திங்கள், 30 டிசம்பர், 2013

ஊக்க மது கை விடேல்

காலிப்பெட்டிகள் நிறைய கண்ணில் பட்டன
காலிப் புட்டிகள் நிறைய காலில் பட்டன
நெருப்பில்,பொறுப்பில்,வெறுப்பில்.

சனி, 14 டிசம்பர், 2013

பேருந்து நிறுத்தத்தில்:

வந்து நின்றாய்
உலகே புத்துணர்வாக
சென்றாய் காலியாக

திங்கள், 9 டிசம்பர், 2013

சொந்தம் எப்போதும்...

அவர் எழுதியது அப்படி இவர் எழுதியது இப்படி
நீ எழுதுவது எப்படி? கேட்டுக் கொள்:

கெட்டுக்கொல்:- விட்டுச் செல்!

திங்கள், 25 நவம்பர், 2013

செல்லும் சொல்லும்

யாவும் இருந்தது இருக்கிறது இருக்கும்
எல்லாமே இருந்து இருக்கிறது

இறந்து(ம்)

வியாழன், 7 நவம்பர், 2013

எத்தனை மனிதர்,மனது?

எத்தனை கதிர்கள், புதிர்கள்?
எத்தனை விதைகள்,புதர்கள்?
விதி வீதி

வெள்ளி, 1 நவம்பர், 2013

பட்டாசும் ஒரு கேடா(ய்)?

தக்காளி, தேங்காய், வெங்காயம்
விற்கும் விலையில் தீபாவளியும்
பெரு வெடியாய்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அட விளையாடலாம் வாங்க:

தோற்பது போல ஜெயிக்கலாம்
ஜெயிப்பது போல தோற்கலாம்
ஒரே விளையாட்டுதான் போங்க!

வியாழன், 10 அக்டோபர், 2013

காமத் தீ(வு)

முத்தக் காவு
மொத்தச் சாவு
இரத்தச் சூடு!

திங்கள், 30 செப்டம்பர், 2013

எனினும்

புகழ்ச்சியும் இகழ்ச்சியும் எனக்கில்லை
வளர்ச்சியும் தளர்ச்சியும் எனக்குண்டு
நான் கடவுள் துளிர்

மாறாக் க(வி)தை கள்

மெதுவாகப் போகிறவர் விரைந்து போகிறார்
விரைவாகப் போகிறவர் மெதுவாகப் போகிறார்
முயலாமை

புதன், 18 செப்டம்பர், 2013

வயசு?

நேற்று வார்த்தை தொலைந்தது
காற்றில் குழல் கேசம் கலைந்தது
மனசு!

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

தனிப் பிறவி தணிகைப் புரவி.

ஒரு கையில் தங்கக் கடிகாரம்
ஒரு தோளில் மண் சட்டி
ஒரு நேரத்தில்...

காலத்தின் வேர்க் கால்களில்

செதுக்கிப் பார்த்தால் சிலை வரவில்லை
விளையாட சதுக்கம் இல்லை

விரயம் நிறையும்!

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

வயிசுக்கு வந்தாச்சு

சிறகுகள் முளைத்த போதினிலே
வரையறையின்றி பறந்தோம்
தாய்க்கூடு சிறை

சனி, 3 ஆகஸ்ட், 2013

பெண் நுரைகள்

எத்தனையெத்தனை திரைகள்
வில(க்)கிப் பார்த்தேன்
கடவுள் ஆனேன்!

புதன், 24 ஜூலை, 2013

ஒரு மணி இசை இரைச்சல்

பீதோவன் சிம்பொனி 3
பில்ஹார்மனி கேட்டேன்
ஐய்யோக் கடவுளே: மனைவி.

புதன், 10 ஜூலை, 2013

அஞ்சுவதும் கெஞ்சுவதும் கொஞ்சுவதும்

எத்தனை எத்தனை உலகங்கள்?
எத்தனை எத்தனை இதயங்கள்?
ஒன்றுக்கொன்று!

திங்கள், 1 ஜூலை, 2013

எதுவும்

சிறியதாக வைத்திருக்கிறார்கள்
பெரியதாக கேட்கிறார்கள்

முன்னோர் கொடுத்தது அதுவும்

ஞாயிறு, 16 ஜூன், 2013

வாழ்க்கை முழுதும் தேடல்

தேடியே வாழ்வு முடிந்த பிறகும்
தேடிய வாழ்வு முடித்த பிறகும்

தேடல் இருக்கக் கூடாது.

புதன், 5 ஜூன், 2013

ஏக்கம் தொட்டுக் கொண்டிருக்க...

ஆசை ஒட்டிக் கொண்டிருக்க
மீசை வெட்டிக் கொண்டிருக்க
யோகி!

புதன், 22 மே, 2013

பழகப் பழகப் பாலும்..


எப்போதாவது பார்ப்பவர்கள் அழகாக
எப்போதும் பார்ப்பவர்கள் அழகிலாமல்

ஜொலிப்பதும் புளிக்கவும்

செவ்வாய், 21 மே, 2013

உணர்ச்சிப் பெருக்கில்


உள்ளுணர்வு சொல்லியது
உன்னை விட வேண்டாமென்று
விட்டுவிட்டேன்...

சனி, 11 மே, 2013

மனஸ்


ஒரு வெற்றுக் காகிததைப் போல
காற்றடிக்கும் திசையில் எல்லாம்
வெள்ளைக் கொக்கு.

வெள்ளி, 10 மே, 2013

சில பூக்கள்


எப்போதாவது ஒரு முறை பூக்கும்
எப்போதும் பூக்கும்


மறுபடியும் பூக்கும்

வியாழன், 2 மே, 2013

மகா பார் ரத நாயகன்:தலையும் வாலும்:


நீங்களும் எம் பெயரைப் பதியவில்லை
நாங்களும் எம் பெயரைப் பதிக்கவிலை

மொய்!

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஈனஸ்வரம்


என்ன ஆகிவிட்டது
ஏன் இந்த இணைய தளங்கள்
இணைய மறுக்கின்றன?

வியாழன், 18 ஏப்ரல், 2013

தீரா ஏக்கம்.


பெரும்பசிக்காரனிடம் விரும்பிய உணவை
காட்டி மறைத்தது
10நிமிட மழை!

சனி, 6 ஏப்ரல், 2013

நிகர் நீ சுடர் தீ


மேல் இருக்கும் மரத்துக்கு திண்டாட்டம்
கீழ் இயக்கும் காற்றுக்கு கொண்டாட்டம்
நீர் வேண்டி தீயின் நடனம்

திங்கள், 1 ஏப்ரல், 2013

இனிதா, புனிதா, மனிதா


வெளிப்படாத காதலும், வெளிப்படுத்திய கோபமும்
உள்ளிருக்கும் காமமும்,  மொழிப்படாத சொற்களும்

சொல், சொல்?. சொல்!.....

உறவைக் கெடுக்கும்


ஆண்களைப் போல் பெண்கள் இருக்கிறார்கள்
பெண்களைப் போல ஆண்கள் இருக்கிறார்கள்
முகப் புத்தகம்.

செவ்வாய், 26 மார்ச், 2013

சொல், சொல்,சொல்!


வெளிப்படாத காதலும்,வெளிப்படுத்திய கோபமும்
உள்ளிருக்கும் காமமும்,மொழிப் படாத சொற்களும்
இனிதா, புனிதா , மனிதா!

சனி, 23 மார்ச், 2013

இலங்கைக்கு


மாமியா(ர்) கொடுத்தது கச்சத் தீவு
மருமக(ள்) கொடுத்தது மெச்சத் தீ(ர்)வு
தமிழ்த் தாய் வயிறு பற்றி எரிய...

திங்கள், 4 மார்ச், 2013

வாழ்க்கையை:


வாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம்
முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில்
நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

அருவம்+உருவம்


 திட்டமிட்ட பொழுதுகளுடன் திட்டமிடா பொழுதுகளும் ஒரு சேர...
கொட்டமிட்டு உருண்டோடும் வாழ்வுச் சுழியில்
நதியின் வாயில்...

திங்கள், 11 பிப்ரவரி, 2013

மன்னர் எவ்வழி குடிகள் அவ்வழி


நல்லதை சொல்பவர்க்கு புழல் (சிறை)ஏரி
நாற்ற வாய் குடிகாரர்களுக்கு நல் கச்சேரி
தமிழ் நாறும் மொழியாக!

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

வறண்டு விட்டது


தணிகை நதியும் காவிரியும்
ஆட்டுக்கு வால்,ஆடு தாண்டும் கால்வாய்க்கால்
சேறுஞ் சகதியும் சோறும் சோர்வும்!

செவ்வாய், 22 ஜனவரி, 2013

தலை குனிந்து நிற்கிறது


அனைவர்க்கும் ஒளி கூட்டி
வாழ்வுக்கு வழிகாட்டும்
தெரு விளக்கு.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

வாழ்த்துக்கள்


மங்கலம் பொங்கிட, மா நிலம் பூத்திட
மேதினியில் மகிழ் பூக்கள் சிந்திட....
பொங்கல்...

செவ்வாய், 8 ஜனவரி, 2013

சு(ய)தந்திரம்- 1947


தியாக விதைகளைத்தானே தூவினோம்?
முட்களும் புதர்களுமே எப்படி பெருகின?
உருமாற்றம்...

சனி, 5 ஜனவரி, 2013

காதல்


ஒரு மலரை விரும்பினேன்
நிறைய மலர்கள்
என் கல்லறையில்