திங்கள், 24 பிப்ரவரி, 2014
மழையின் ரீங்கார இசை
குடை தலை மீது இருந்தது
மழை குடை மீது இசைத்தது
இயைந்திருந்தோம் நேரம்!
புதன், 12 பிப்ரவரி, 2014
அது தான் வாழ்க்கை.
தூக்க முடியாவிட்டாலும் தூக்கிதான் ஆகவேண்டும்
தூங்க முடியாவிட்டாலும் தூங்கிதான் ஆகவேண்டும்
எதிர்பாரா(த) சேர்(க்)கை
வியாழன், 23 ஜனவரி, 2014
ந ன் று எது தீ து?
நாயுருவி கூட நன்றாய்த்தான் பூக்கிறது
தாழையில் நாகம் மோகம் கொண்டிருக்கிறது
என்றாலும் ஒன்றாமோ?
வியாழன், 16 ஜனவரி, 2014
ஜீவிதம் மாயையா?
பூமித்தாயா? சூரியக்குழந்தையா?
ஆறுகள் இரத்த நாளமா? சமுத்திரம் இரத்தமா?
மாயா சக்தி
திங்கள், 30 டிசம்பர், 2013
ஊக்க மது கை விடேல்
காலிப்பெட்டிகள் நிறைய கண்ணில் பட்டன
காலிப் புட்டிகள் நிறைய காலில் பட்டன
நெருப்பில்,பொறுப்பில்,வெறுப்பில்.
சனி, 14 டிசம்பர், 2013
பேருந்து நிறுத்தத்தில்:
வந்து நின்றாய்
உலகே புத்துணர்வாக
சென்றாய் காலியாக
திங்கள், 9 டிசம்பர், 2013
சொந்தம் எப்போதும்...
அவர் எழுதியது அப்படி இவர் எழுதியது இப்படி
நீ எழுதுவது எப்படி? கேட்டுக் கொள்:
கெட்டுக்கொல்:- விட்டுச் செல்!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)