போல்விளை
தாயைப் போல ஒரு தமக்கை ஆனாள்
தனயனைப் போல ஒரு சீடன் ஆனான்
ஆல்விதை
GROW(TH) LIKE THAT
One Sister became (as) a Mother
One Disciple became ( as) a son
Seed of Banyan
போல்விளை
தாயைப் போல ஒரு தமக்கை ஆனாள்
தனயனைப் போல ஒரு சீடன் ஆனான்
ஆல்விதை
GROW(TH) LIKE THAT
One Sister became (as) a Mother
One Disciple became ( as) a son
Seed of Banyan
கட உள்
அதுவாகி இதுவாகி எல்லாம் அழிந்து
கடைசியில் எதுவாகி நிற்கிறதோ அதுவே
கடவுள்
GO INSIDE
THAT ONE AND THIS ONE ALL WILL BE ERASED
AND AT LAST WHICH ONE STOOD AS THAT IS
GOD
ஒரு வண்ணத்துப் பூச்சி என் குடையின் கீழ்
நிற்காத மழையும் நடையும்
இதயத்துப் பொய்கையுடன்
A butterfly comes under my umbrella
continuous Raining with Walking
Heart full of sweet poetic stream
மயானக் காடுகளில் எலும்புகள்கூட மிஞ்சுவதில்லை
தியானச் சமுத்திரத்தில் நினைவுப் பிசிறுகள் தங்குவதில்லை
மையம் குவி
In burial yards there is no rest of bones
In Meditation ocean there is no chance of think fibers
Center point accumulate.
உலகெலாம் அழியும் காட்டுத் தீ அணைக்க
ஒரு சிறு பறவையின் அலகில்
சொட்டு நீர்
TO EXTINGUISH WILD FIRE
ONE SMALL BIRD'S BEAK
A WATER DROP
எல்லையிலா ஒளி, நின்றெரியும் விளக்காக
அலையாத சுடராக, அசையாத உருவாக
அளப்பரிய உண்மை
ENDLESS LIGHT, STANDING LIGHT
UN WAVERED FLAME,UNSHAKEN SHAPE
UN MEASURABLE TRUTH.
வாழ்க்கை, கனவு, அரசியல், சினிமா
எல்லாமே ஒன்றாகிப் போச்சு
பூச்சி!
LIFE, LIFE TIME DREAM, POLITICS AND CINEMA
ALL ARE IN ONE FOLD
IN(SECT)
எத்தனையோ உயிர்கள் இல்லாமல் போயின
எத்தனையோ உடல்கள் இல்லாமல் போயின
ஓருலகுச் சுழி
Infinite life disappeared
Infinite bodies disappeared
One World's spiral
கடல் கொஞ்சும் ஆகாயம் மிஞ்சும்
கடல் கொஞ்சம் ஆகாயம் மிஞ்சும்
நெனப்பூ
COOING OCEAN BEATEN BY SKY
SMALL OCEANS( limited compete by ) INFINITE SPACE
THINKING IS LIKE FLOWER
உலகெலாம் ஒரே கூடையின் கீழ்
உலகெலாம் ஒரே குடையின் கீழ்
பெட்ரோல் பம்ப்...
World is with one basket
World is under one roof
Petrol pump
அந்தி உதயமென்பதெல்லாம் ஏது?
கதிரொளி பட புவிச் சுழல் மாறலென்பதே
திசைவெளி விசைவளி
Really there is no dawn and dusk
Earth Rotated changes with Sun light
Directions with Speed in open space
இறையின் கால்கள்,கைகள் எதுவென்று அறியாதிருக்கிறார்கள்
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் அவைதான் என்று தெரியாதிருக்கிறார்கள்
இயற்கை
*விண்,மண்,நீர்,தீ,விசும்பு
No body knows about the limbs of GOD
LAND,FIRE,WATER,WIND,AND SPACE ARE
NATURE
பி.கு: இவர்கள் இறை எதுவென்று உணராதிருக்கிறார்கள்.
பாய் நிறைய அவள்
வாய் நிறைய அவல்
பாய் வாய்
Mate filled with her
Mouth filled with Flattened Rice
Mate and Mouth
குப்பை குப்பையோடு பணப் பை பணப் பையோடு
ஆன்மாவும் விதிப் பயனும் குணத்தின் மணத்தோடு
இனம் இனத்தோடு.
Wastes and Money bags goes along with
Soul and Fate with character' and flavor
Get together with same colors.
யோனி உதிர(ம்) கருக்கட்டி
ஆணாய் பெண்ணாய் உருக் காட்டி(டும்) டும்
(உ)பாதைகள்!
Source of Creation with embryo and fetus
with Male and female figures shows
Routes and Difficulties.
ஒரு பெண்மணி ஒரு ஆண்மணி
இரண்டும் சேர்ந்த ஒரு பொன்மணி
என் கண்மணி
ONE FEMALE AND ONE MALE OF JEMS
CREATED A GOLDEN GEM
THAT IS MY JEWEL OF EYE
அதைக் கொடு(ங்க) இதைக் கொடு(ங்க) என்கிறாய்
இருந்தால்தானே கொடுப்பதற்கு
மனையின் கோஷம்
ALWAYS YOU ARE TELLING-
GIVE THIS, AND GIVE THAT
BUT WHAT/(where )WE HAVE TO GIVE?
NOISE OF HOUSE